இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு உள்ள தொடர்புகள் என்ன என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிடும் ஒவ்வொரு சமூக வலைதளப் பதிவும் அல்லது அறிக்கையும் புதிய கேள்விகளை எழுப்பி வருவதாக தெரிவித்துள்ள ப.சிதம்பரம், இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்போவது யார் என்றும் வினவியுள்ளார். முன்னதாக காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்கியதால் இருநாடுகள் இடையே போர் மூண்டது. 4 நாட்கள் நடந்த சண்டை கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் அறிவித்தார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ‘போர் நிறுத்தம்’ குறித்து முதலில் அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பதும், இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியாவதற்கு முன்பு வெளியிடப்பட்டது என்பதும் சர்வதேச அளவில் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது. சண்டை நிறுத்தம் குறித்து தனது முதல் பதிவில் குறிப்பிட்டிருந்த டிரம்ப், இரண்டாவது பதிவில் காஷ்மீர் பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசியிருந்தார்.. இந்த சூழலில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோசமான அணுசக்திப் போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
The post அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடும் ஒவ்வொரு சமூக வலைத்தள பதிவும் புதிய கேள்விகளை எழுப்புகிறது :ப.சிதம்பரம் கருத்து!! appeared first on Dinakaran.