இஸ்லாமியர்கள் பாஜவுக்கு எதிராக போராட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

பண்ருட்டி: கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து பொதுக்கூட்டம் பண்ருட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறும்வரை சோர்ந்து விடக்கூடாது. நம்பிக்கை இழந்து விடக்கூடாது. இந்த சட்டத்தை திரும்ப பெறவைக்க முடியும். பாசிச கும்பல் இஸ்லாமியர்களை அந்நியர்களைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

இந்த தேசம் எங்களுக்கான தேசம் என ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்க வேண்டும். வன்முறை தேவையில்லை. வேளாண் விவசாயிகள் ஒரு துளி வன்முறைகூட இல்லாமல் தொடர்ந்து அமைதியான வழியில் போராட்டம் நடத்தி ஆணவம் கொண்ட இந்த ஆட்சியாளர்களை மன்னிப்பு கேட்க வைத்தார்கள். பஞ்சாபில் தோல்வி பெறசெய்தார்கள். சட்டத்தை திரும்பப் பெற வைத்தார்கள். இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்புகிறார்கள். இஸ்லாமியர்கள் பாஜவுக்கு எதிராக போராட வேண்டுமே தவிர இந்து சமூகத்திற்கு எதிராக அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

 

The post இஸ்லாமியர்கள் பாஜவுக்கு எதிராக போராட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: