நாட்டிற்காக பாஜவோடு மற்ற கட்சிகள் இணைந்திருப்பது நல்லது, அது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் நடந்துள்ளது. தம்பி விஜய் களத்திற்கு இறங்கி வந்திருப்பது மகிழ்ச்சி. காணொலியில் இருந்து கொண்டு வொர்க் பிரம் ேஹாமில் இல்லாமல், ஒர்க் ப்ரம் பீல்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இன்னொரு வேண்டுகோள். என்னவென்றால் வாக்கு அளிக்கும் வயது அல்லாதவர்கள் கூட அங்கே நிறைய பேர் காணப்பட்டார்கள், குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும். கட்சியில் உள்ள குழந்தைகள் விஜய் பின்னால் வந்து படிப்பதை நிறுத்தி விடக்கூடாது. 2026ல் களம் எப்படி இருந்தாலும் மத்தியில் பலமாக ஆளும் பாஜ கட்சியும், இதற்கு முன்னால் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post படிப்பு பாதிக்கும் என்பதால் விஜய் கூட்டத்தில் குழந்தைகள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்: தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.