இந்த குரூப் டி பதவிகளுக்கு மொத்தம் 32,438 காலியிடங்கள் இருப்பதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை பார்த்தால், தேர்வு செயல்முறை மிகவும் கடினமாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது. ஆன்லைன் பதிவு சுற்று முடிவடைந்த நிலையில், குரூப் டி ஆட்சேர்ப்புக்கான தேர்வு தேதிகளை ஆர்ஆர்பி விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 32,438 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 1 கோடியே 8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக மும்பையில் அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக ரயில்வே தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
The post குரூப் 4 ரயில்வே தேர்வு 32,000 காலி பணியிடங்களுக்கு சுமார் 1 கோடி பேர் விண்ணப்பம்: தேர்வு மிகவும் கடினமாக இருக்கலாம் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.