ஈரோடு, ஏப். 12: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆரம்ப நிலை மைய குழந்தைகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கள் ஒரு நாள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். சுற்றுலா பயண வாகனத்தை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் கொங்கு அறிவாலயம் சிறப்புப் பள்ளி மற்றும் அரிமா சிறப்பு பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறன் குழந்தைகள், அவர்களை வழிநடத்தும் சிறப்பாசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் என 55 பேர் இந்த கல்வி சுற்றுலாவில் கலந்துகொண்டனர்.
இந்த ஒருநாள் கல்வி சுற்றுலாவானது காலை 9.30 மணிக்கு, பவானிசாகர் அணை பூங்காவிற்கு சென்று, கற்றல்தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி,மாவட்ட சுற்றுலா அலுவலர் பழனிச்சாமி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post ஆரம்ப நிலை மைய குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா appeared first on Dinakaran.