ஈரோடு, ஏப். 10: ஈரோட்டில் காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கி பேசினார்.
இதில், சிபிஎஸ் சந்தா இறுதி தொகை வழங்க கோரும் கோப்பு மற்றும் அரசாணை 33ல் உரிய திருத்தம் வெளியிட்டு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரும் கோப்புக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளருக்கு இணையாக வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் வெங்கிடு, தோழமை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கெண்டனர்.
The post காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.