மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்க்கும் பணி

ஈரோடு, ஏப். 23: ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 9 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளதை முன்னிட்டு, அதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்க்கும் பணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பேரூராட்சியில் 17வது வார்டு உறுப்பினர் பதவி, பவானிசாகர் பேரூராட்சியில் 11வது வார்டு உறுப்பினர் பதவி, சென்னசமுத்திரம் பேரூராட்சியின் 7வது வார்டு உறுப்பினர் பதவி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் 2வது வார்டு உறுப்பினர் பதவி, கிளாம்பாடி பேரூராட்சியில் 10வது வார்டு உறுப்பினர் பதவி, கூகலூர் பேரூராட்சியில் 3வது வார்டு மற்றும் 5வது வார்டு உறுப்பினர் பதவி, பள்ளபாளையம் பேரூராட்சியில் 11வது வார்டு உறுப்பினர் பதவி, வாணிபுத்தூர் பேரூராட்சியில் 4வது வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 9 பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளது.

இந்த பதவிகளுக்கான இடைத்தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் நாளில் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்க்கும் பணி ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2வது நாளாக நடந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்க்கும் பணியை நேற்று ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ் உட்பட பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்க்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: