கோபி,ஏப்.18: ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், 2வது நாளாக கோபி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார். ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்,2வது நாளாக, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்காரா,”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம் விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் பழங்குடியினர் காலனி, ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம், டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முதன்மை பதப்படுத்தும் நிலையம், குளிர்பதனக் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அனைத்துத் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, 2ம் நாளான நேற்று, நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, தினசரி வரப்பெறும் பாலின் கொள்ளளவு, சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஈவுத் தொகை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். கோபி நகராட்சி, புதுசாமி கோயில் வீதி, ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்க தயாரிக்கப்பட்ட உணவினை சுவைத்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, கரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்தை ஆய்வு செய்தார்.
ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் (சத்துணவு), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரியா, ஜிம்னாஸ்டிக் பயிற்றுநர் தனபாக்கியம் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post உங்களைத் தேடி உங்கள் ஊரில் டி.என்.பாளையம் ஊராட்சியில் கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.