ஊட்டி, ஏப். 3: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் தமிழக முதல்வருக்கு தொமுச., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. நீலகிரி மண்டல போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கூட்டம் ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நீலகிரி மண்டல பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கவுன்சிலர் தலைவர் மாடசாமி, கவுன்சில் செயலாளர் ஜெயராமன், மண்டல தலைவர் லுக்மேன் ஹக்கீம், மண்டல பொருளாளர் ஆனந்தன், மண்டல துணைத் தலைவர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு தொமுச., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினம் அனைவரும் கருப்பு, சிவப்பு கொடியுடன் தமிழக முதல்வரை வரவேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், நிர்வாகிகள் குணசேகரன், நஞ்சுண்டன், மகேந்திரன், ராஜாமணி, சிவசண்முகம், டாஸ்மாக் எல்பிஎப்., கணேஷ், குமார், ஸ்டாப் யூனியன் இங்கர்சால், தோட்டக்கலை எல்பிஎப்., ரமேஷ், சிவசங்கரன், சந்திரன், தமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நீலகிரிக்கு வருகை தரும் முதல்வருக்கு தொமுச சார்பில் வரவேற்பு அளிக்க முடிவு appeared first on Dinakaran.