குன்னூர், ஏப்ரல்.5 : குன்னூர் அருகே மனித- வனவிலங்கு மோதல் குறித்து, கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், சமீப காலமாக மனித- வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. இதனால், பலர் உயிரிழந்த சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் கெளதம் உத்தரவு பேரில், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் சார்பில், குன்னூர் அருகேயுள்ள சேம்பக்கரை பகுதியில் இதுகுறித்த விழிப்புணர்வுகளை கலைநிகழ்ச்சிகள் மூலம் குன்னூர் வனத்துறையினர் எடுத்துரைத்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமை வகித்தார். காடுகள் வளர்ப்பதன் முக்கியத்துவம், பல்லுயிர் சூழல் உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் மனித- வனவிலங்கு மோதலை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வீதி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், வனத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
The post குன்னூர் அருகே மனித- வனவிலங்கு மோதல் குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.