நடிகர் சிவாஜி மணிமண்டபம் அருகே ஹெராயின் விற்ற 2 திரிபுரா வாலிபர்கள் கைது: போதை பொருள் தடுப்பு பிரிவு நடவடிக்கை

சென்னை: நடிகர் சிவாஜி மணிமண்டபம் அருகே ஹெராயின் விற்ற 2 திரிபுரா மாநில வாலிபர்களை போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை அபிராமபுரம் துர்காபாய் தேஷ்முக் சாலை மற்றும் சிவாஜி மணிமண்டபம் பேருந்து நிலையம் அருகே இரவு நேரங்களில் ஹெராயின் விற்பனை நடப்பதாக போதை தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று போதை தடுப்பு பிரிவு போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 வாலிபர்கள் சுற்றி வந்தனர். இதை கவனித்த போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது 3 கிராம் எடை கொண்ட ஹெராயின் வைத்திருந்தது தெரியவந்தது. உடனே 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்திய போது, திரிபரா மாநிலத்தை சேர்ந்த சோஹக் மியா(24), அப்துல் மியா(24) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் சென்னை தரமணி ராம் நகர் 1வது தெருவை மற்றும் காரம்பாக்கம் கந்தசாமி தெருவில் வீடு எடுத்து தங்கி, ஹவுஸ் கீப்பிங் பணி செய்து கொண்டு, போதை பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 2 பேரையும் அபிராமபுரம் காவல் நியைத்தில் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் 2பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 3கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post நடிகர் சிவாஜி மணிமண்டபம் அருகே ஹெராயின் விற்ற 2 திரிபுரா வாலிபர்கள் கைது: போதை பொருள் தடுப்பு பிரிவு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: