கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராஜை, அவரது சகோதரி சாந்தி அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்து வந்துள்ளார். அதன்பின் சிவராஜ் வீட்டிற்கு செல்லாமல் காட்டேஜிலேயே தங்கியிருந்தார். இதற்கிடையே மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற போது சிவராஜிற்கும், உடன் சிகிச்சை பெற்ற மதுரை தத்தனேரியை சேர்ந்த மணிகண்டன் (25) மற்றும் அருண், ஜோசப், சந்தோஷ், நாகசரத் ஆகியோருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து வெளியே வந்த பின்பும் அடிக்கடி சேர்ந்து மது குடித்து வந்ததாக தெரிகிறது.
கடந்த மார்ச் 20ம் தேதி சிவராஜ் காட்டேஜில் 6 பேரும் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய சிவராஜ், மற்ற 5 பேரிடமும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சிவராஜை சரமாரியாக தாக்கியதுடன், மதுபாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிவராஜை அருகில் இருந்த கேம்பயரில் வைத்து டீசல் ஊற்றி எரித்துள்ளனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி எறிந்து விட்டு தப்பினர்.
சிவராஜ் மாயமானது குறித்து தங்கை கொடுத்த புகாரின்படி கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மணிகண்டன் நேற்று சிகிச்சை பெற்ற மறுவாழ்வு மையத்திற்கு சென்று அங்குள்ள நிர்வாகியிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். உடனே அந்த நிர்வாகி மதுரை போலீசில் புகார் செய்ததையடுத்து, போலீசார் மணிகண்டனை கைது செய்து கொடைக்கானல் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து மணிகண்டன் அளித்த தகவலின்பேரில் சிவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர். இவர்களை கைது செய்தால் தான் சொத்திற்காக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
The post மதுபாட்டிலால் சரமாரியாக குத்தி கேம்பயரில் டீசல் ஊற்றி தொழிலதிபர் எரித்து கொலை: கொடைக்கானலில் பயங்கரம் appeared first on Dinakaran.