திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் பட்டத்திபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (39). இவர் புஞ்சைத்தலையூர் ஊராட்சியில் குடிநீர் விநியோக பிரிவில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது மனைவி மற்றும் சில பெண்கள் சாலையில் நடந்து சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சிவகுமார் (49), சேமலை (39) ஆகியோர் சக்திவேலின் மனைவி மற்றும் உடன் சென்ற பெண்களை கேலி கிண்டல் செய்ததுடன் சக்திவேலுவின் மனைவியை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து சக்திவேல், சிவக்குமார், சேமலை ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது, சிவக்குமாரும், சேமலையும் சேர்ந்து சக்திவேலை தாக்கியதில் படுகாயமடைந்து காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமார், சேமலை இருவரையும் கைது செய்தனர்.
The post ஊராட்சி ஊழியர் கொலை appeared first on Dinakaran.