சென்னையில் இன்று 1 மணி நேரத்தில் அடுத்தடுத்த 7 இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள்

சென்னை: சென்னையில் இன்று மொத்தம் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. திருவான்மியூர், இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாஸ்திரி நகர் பகுதியில் அம்புஜம் என்ற பெண்ணிடம் அரை சவரன் செயின் மர்மநபர்களால் பறிக்கப்பட்டுள்ளது. கிண்டி எம்ஆர்சி மைதானம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த நிர்மலா என்ற பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சைதாப்பேட்டையில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த இந்திராவிடம் 1 சவரன் மதிப்புள்ள செயின் பறிக்கப்பட்டுள்ளது. இதே போல் வேளச்சேரி டான்சி நகர் பகுதியில் உள்ள பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் பள்ளிக்கரணை பகுதியிலும் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் நடைபெற்றிருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயின் பறிப்பு கும்பலை சேர்ந்தவர்கள் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி, பின்னர் அடையாறு மற்றும் வேளச்சேரி பகுதிகளில் புகுந்து 1 மணி நேரத்திற்குள் செயின்களை புரிந்துகொண்டு தலைமைவாகியுள்ளதும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

The post சென்னையில் இன்று 1 மணி நேரத்தில் அடுத்தடுத்த 7 இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் appeared first on Dinakaran.

Related Stories: