தஞ்சை: ரம்ஜான் பண்டிகை விடுமுறையை தஞ்சை மாவட்டத்தில் வேலை நாளாக ஆட்சியர் அறிவித்ததாக வதந்தி பரப்படுகிறது. மாசிமகத் விழாவை ஒட்டி கடந்த 12ம் தேதி தஞ்சாவூரில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாசிமகத் விழா விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 29ம் தேதி பணி நாளாக ஆட்சியர் அறிவித்து உத்தரவிட்டார். மார்ச் 29ம் தேதி ரம்ஜான் கிடையாது 31ம் தேதி தான் ரம்ஜான் பண்டிகை என உண்மை சரிபார்பகம் விளக்கம் அளித்தது.
The post தஞ்சையில் ரம்ஜான் பண்டிகை விடுமுறையை வேலை நாளாக ஆட்சியர் அறிவித்ததாக வதந்தி..!! appeared first on Dinakaran.