கராத்தே ஹுஸைனி உடல் நல்லடக்கம்

மதுரை: புற்றுநோய் பாதிப்பால் இறந்த கராத்தே ஹூஸைனியின் உடல் மதுரையில் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. மதுரை காஜிமார் தெருவை சேர்ந்தவர் ஷிஹான் ஹூஸைனி (60). சென்னை பெசன்ட் நகரில் வசித்து வந்தார். நடிகர், கராத்தே பயிற்சியாளரான இவர் வில்வித்தை, ஓவியம் உள்ளிட்டவற்றில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளித்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை இறந்தார். கராத்தே வீரர்கள் உள்ளிட்டோர்கள், அரசியல், சினிமா பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தனது உடலை தானமளித்திருந்தார். உடலை மருத்துவமனைக்கு ஒப்படைக்கும் முடிவில் குடும்பத்தினரின் மாறுபாடு காரணமாக அவரது உடல் நேற்று காலை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை காஜிமார் தெரு கொண்டு வரப்பட்டது. இங்கு அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கராத்தே வீரர்கள், உறவினர்கள் ஷிஹான் ஹூசைனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே காஜிமார் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்திற்கு நேற்று மாலை அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையிலும் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கராத்தே ஹுஸைனி உடல் நல்லடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: