ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு கோடை கால சலுகையாக 75 நபர்களுக்கு இலவச பயணம்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை; தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணச்சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு முறை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது, https://www.tnstc.in, மற்றும் TNSTC Mobile App வழியாக செயல்படுகிறது.

முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர குலுக்கல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு கோடை காலத்திற்காக ஒரு சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்புதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் செய்யும் 75 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில், தேர்வு செய்யப்பட்டு இலவச பயண சலுகை வழங்கப்படும்.

முதல்பரிசு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 20 முறை பயணம் செய்பவர்களுக்கு இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை)

2ம் பரிசு:

அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 10 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 )

3ம்பரிசு:

அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 5 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 ) எனவே பொதுமக்கள், அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்யவும். சிறப்பு பரிசுகளை வெல்லவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு கோடை கால சலுகையாக 75 நபர்களுக்கு இலவச பயணம்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: