அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 282-வது குழு கூட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள்

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்ட அறிக்கை: சென்னை, எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் அமைந்துள்ள சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 282வது குழுமக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டங்களின் திட்டங்கள் குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலிப்பது குறித்தும் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்குழுமக் கூட்டத்தில் மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் , மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பிரபாகர், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் கணேசன், குழும உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 282-வது குழு கூட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் appeared first on Dinakaran.

Related Stories: