அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி சம்பளம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இந்த ஆண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கி கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி சம்பளம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: