ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னை-குமரிக்கு சிறப்பு ரயில்

நெல்லை: இஸ்லாமியர்களுக்கான ரம்ஜான் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06037) வரும் 28ம் தேதியன்று தாம்பரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – தாம்பரம் சிறப்பு ரயில் (06038) வரும் 31ம் தேதியன்று கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 14 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். பெங்களூரு-சென்னை இதேபோல் வரும் 28ம்தேதி பெங்களூருவில் இருந்து (வண்டி எண்: 07319) சென்னை சென்ட்ரல் வரை சிறப்பு ரயிலை இயக்க உள்ளது.

இந்த சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து காலை 8.18 மணிக்கு புறப்பட்டு யஷ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். பின்னர் 3.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் (வண்டி எண்: 07320) இருந்து புறப்பட்டு மேற்கண்ட ரயில் நிலையங்களில் நின்று சென்று இரவு 10.50 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை அடையும்.

The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னை-குமரிக்கு சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Related Stories: