மாணவர்களுக்கு போதை ஊசி விற்ற வாலிபர் கைது

சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லையில் போதை பொருள் விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் ‘போதைபொருள் தடுப்பு பிரிவுக்கு’ உத்தரவிட்டுள்ளார். அதன்படி கஞ்சா, மெத்தம்பெட்டமின் உள்ளிட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நுங்கம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததாக கடந்த 17ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அளித்த ரகசிய தகவலின்படி நுங்கம்பாக்கம் இன்ஸ்ெகடர் கருணாகரன் தலைமையிலான போலீசார், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் சோதனை நடத்தி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த காத்திக்ராஜா (27), நாகப்பட்டிணம் மாவட்டம் தெத்திசமர்சன் நகரை சேர்ந்த முகமது ஜெகர் சாதிக் (24), செஞ்சி அனந்தபுரம் கீழ்மலை பகுதியை சேர்ந்த ராம்சந்தர் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 6 கிராம் மெத்தம்பெட்டமின், ரூ.12,500 ரொக்கம், 26 போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேர் அளித்த தகவலின் படி, மெத்தம்பெட்டமின் விற்பனை செய்த ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சோந்த கடவுகூட்டி உதயகுமார் (27) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர், மெத்தம்பெட்டமின் மற்றும் போதை ஊசிகளை மொத்தமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

The post மாணவர்களுக்கு போதை ஊசி விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: