சிறுமிகளிடம் தகராறு செய்தவர் கைது

 

திருச்சி, மார்ச் 19: சிறுமிகளிடம் இறகுபந்து பேட்டை பிடுங்கி, அவர்களது தந்தையை தாக்கிய வாலிபவரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். திருச்சி, ஏர்போர்ட், காமராஜ் நகர், வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (42). மார்ச்.16ம் தேதி இவரது மகள்கள் இருவரும் வீட்டின் அருகே இறகு பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் சிறுமிகளிடமிருந்து இறகுபந்து பேட்டை பிடுங்கி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இதுகுறித்து கேட்டபோது விஜயகுமாரை அந்த மர்மநபர் தகாத வார்த்தைகளால் திட்டி, வண்டி சாவிகொண்டு காயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் ஏர்போர்ட் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த ஆனாந் (32) என்பவரை கைது செய்தனர்.

 

The post சிறுமிகளிடம் தகராறு செய்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: