திருச்சி, மார்ச் 15: கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் பொருட்டு இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமையன்று பணியாளர் நாள் நடத்தப்படும் அதன்படி தமிழக முதலமைச்சரின் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கான பணியாளர் நாள் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அண்ணா நகர் கிளையில் நேற்று நடைபெற்றது. முகாமில் கூட்டுறவு சங்கங்களில் தற்போது பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுக்கள் மூலம் சமர்ப்பித்தனர். இப்பணியாளர் நாள் நிகழ்வில் மனுக்கள் பெறப்பட்டன.
அத்தகைய மனுக்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பெறப்பட்ட மனுக்களும் இரண்டு மாதத்திற்குள் தீர்வு காணப்படும். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் அரசு துணைப்பதிவாளர், பணியாளர் அலுவலர் பிரேமலதா, திருச்சிராப்பள்ளி சரக துணைப்பதிவாளர் முத்தமிழ்செல்வி, லால்குடி சரக துணைப்பதிவாளர் சந்தானலெட்சுமி, முசிறி சரக துணை பதிவாளர்குமார், துணைப்பதிவாளர் பயிற்சி கருமாரிதாசன் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர் செந்தில்குமார் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.
The post திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாளர் தின விழா appeared first on Dinakaran.