லால்குடி வட்டார அங்கக வேளாண்மை விவசாயிகள் கர்நாடகாவில் கண்டுணர்வு சுற்றுலா

 

லால்குடி, மார்ச் 15: லால்குடி வட்டார அங்கக வேளாண்மை விவசாயிகள் கர்நாடகாவில் கண்டுணர்வு சுற்றுலா மேற்கொண்டனர். இதில் பூச்சி கட்டுப்படுத்த இயற்கை இடு பொருட்கள் தகவல் அறிந்தனர். அட்மா திட்டம் சார்பில் வெளி மாநில அளவில் அங்கக வேளாண்மை விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா நடைபெற்றது. இதை முன்னிட்டு லால்குடி வட்டாரத்தில் இருந்து அங்கக வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்ள கர்நாடகா மாநிலத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் மண்டல அலுவலகம் வரை 5 நாட்கள் கண்டுணர்வு சுற்றுலா சென்றனர்.

அங்கு, அங்கக சாகுபடி தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை , பூச்சி கட்டுப்பாடு இயற்கை இடு பொருட்களை பயன்படுத்துதல், களை மேலாண்மை, நீர் மேலாண்மை பற்றி நிலைய பேராசிரியர்கள் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் ஆராய்ச்சி நிலைய குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக விளக்கி கூறினார்கள். சுற்றுலாவில் லால்குடி வட்டார பகுதியான சிறுமயங்குடி, மருதூர், மும்முடி சோழமங்கலம், நெய்க்குப்பை, டி.கல்விகுடி, புதூர் உத்தமனூர் கிராமத்தில் இருந்து பல முன்னாடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியப்பிரியா, வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

The post லால்குடி வட்டார அங்கக வேளாண்மை விவசாயிகள் கர்நாடகாவில் கண்டுணர்வு சுற்றுலா appeared first on Dinakaran.

Related Stories: