திருச்சி, மார்ச் 13: புதுக்கோட்டை விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட ஆவூர் பகுதியில் கிணற்றி விழுந்து உயிருக்கு போராடிய பெண்ணை நவல்பட்டு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட ஆவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராயப்பன் இவரது மகள் யுவாஞ்சலி (27). இவர் சற்றுமனநிலை பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் நேற்று தடுப்பு கட்டை ஏதும் இல்லாம் இருந்த ஊர் பொதுகிணற்றில் யுவாஞ்சலி கால் தவறி விழுந்து விட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் உடனே நவல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறப்பு நிலைய அலுவலர் ஆர்த்தர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய யுவாஞ்சலியை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
The post திருச்சி அருகே கிணற்றில் விழுந்து தவித்த பெண் பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.