லால்குடி அடுத்த அழுந்தலைப்பூரில் ரூ.13 லட்சத்தில் பல்நோக்கு அலுவலகம்

 

லால்குடி, மார்ச் 13: லால்குடி அருகே அழுந்தலைப்பூர் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் பல்நோக்கு அலுவலக கட்டிட துவக்கப்பணியை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார். லால்குடி சட்டமன்றத் தொகுதி புள்ளம்பாடி ஒன்றியத்தில் அழுந்தழைப்பூர் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் பல்நோக்கு அலுவலக கட்டிடம் கட்டும் பணி துவக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு கட்டிட பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலக்குழுதலைவர் பழனிமுத்து, மால்வாய் முன்னாள் தலைவர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் சௌந்தரபாண்டியன், சின்னச்சாமி, வசந்திசுப்பிரமணியன், ஒப்பந்தக்காரர் முருகவேல் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post லால்குடி அடுத்த அழுந்தலைப்பூரில் ரூ.13 லட்சத்தில் பல்நோக்கு அலுவலகம் appeared first on Dinakaran.

Related Stories: