தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்த மினி லாரி ஜல்லிக்கட்டு காளைகள் தப்பியது

 

துவரங்குறிச்சி, மார்ச் 13: திருச்சி-மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஜல்லிக்கட்டு காளை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை கல்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் மகன் தாமோதரன் (35). இவர் நேற்று காலை சரக்கு ஆட்டோவில் சிவகங்கை மாவட்டம் அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டுக்காக மூன்று மஞ்சுவிரட்டு காளைகள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களை ஏற்றிக்கொண்டு மணப்பாறை துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, புத்தாநத்தம் அருகே மெய்யம்பட்டி பிரிவு சாலை அருகே மினி லாரி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தலைகீழாக கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் காளைகளும் மற்றும் அதில் வந்த மாட்டின் உரிமையாளர்களும் எவ்வித காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்த மினி லாரி ஜல்லிக்கட்டு காளைகள் தப்பியது appeared first on Dinakaran.

Related Stories: