மழை நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்த போது பைக் மோதி நர்ஸ் பலி

தூத்துக்குடி,டிச. 16: தூத்துக்குடியில் மழை நீர்தேங்கியபள்ளத்தில் தவறி விழுந்த நர்ஸ் மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி கோரம்பள்ளம் இ.பி காலனியை சேர்ந்த ஜெகனின் மனைவி சுகப்பிரியா (35). தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த இவர் நேற்று மாலை வழக்கம்போல் பணிக்குச் செல்ல தனது வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி பாளை ரோடு டீச்சர் காலனி அருகே வந்தபோது மழை நீர்தேங்கி கிடந்த பள்ளத்தில் தவறிகீழே விழுந்தார். அப்போது சாயர்புரத்தை சேர்ந்த முருகன் (44) என்பவர் ஓட்டிவந்த பைக், சுகப்பிரியாவின் மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே சுகப்பிரியா பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மழை நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்த போது பைக் மோதி நர்ஸ் பலி appeared first on Dinakaran.

Related Stories: