திருவாரூர், டிச. 16: திருவாரூர் மாவட்டத்தில் செல்லும் ஆறுகளில் அதிகளவில் நீர் செல்வதால் சிறுவர், சிறுமியர் ஆறுகளில் குளிப்பதை தடுத்திட வேண்டும் என பெற்றோர்களை கலெக்டர் சாரு கேட்டுகொண்டுள்ளார். வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 11,12 மற்றும் 13 தேதிகளில் கனமழைபெய் தது. இதன்காரணமாக அனை த்து ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து சென்ற வண்ணம் இருந்து வருகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்திலும் வெண்ணாறு, வெட்டாறு, ஓடம்போக்கி ஆறு, பாண்டவையாறு, கோரையாறு, பாமணியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் அதிகளவில் தண்ணீர் செல்லும் நிலையில் பாதுகாப்பு கருதி ஆறுகளில் சிறுவர், சிறுமியர் குளிப்பதை பெற்றோர் கண்காணித்து தடுத்திட வேண்டும் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நகர்புறம், கிராமபுறப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட அனைவரும் ஆற்று பகுதிகளுக்கு குளிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதுடன் நீர்நிலைகள் முன்பாக செல்பி எடுப்பது மற்றும் ஆடு, மாடுகளை நீரில் அழைத்து செல்வது கூடாது. வனஅலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் நீர்நிலைகளில் குளிக்கசெல்வோர் அசாதாரண செயல்களில் ஈடுபடுவதை கண்காணித்திடவும், அவ்வாறு ஈடுபடுவதை தவிர்க்கும் படி அறிவுரை வழங்கிடவும் வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
The post சிறுவர், சிறுமியர் ஆறுகளில் குளிப்பதை தடுத்திட வேண்டும் பெற்றோர்களுக்கு, கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.