புகைப்பட கலைஞர்களுக்கு தனி நல வாரியம் வேண்டும் மன்னார்குடி பொதுக்குழுவில் வலியுறுத்தல்

மன்னார்குடி, டிச. 16: மன்னார்குடி நகர, வட்டார புகைப்பட, ஒளிப்பதிவாளர்கள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நகர தலைவர் காஜா மைதீன் தலைமையில் நேற்று நடந்தது. நிர்வாகிகள் பாஸ்கர், ரவிச்சந்திரன், வினோத்குமார், அரவிந் தன், சக்தி பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்டத் தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் சிவராஜ், எஸ்எம்டி கருணாநிதி, மாவட்ட சங்க கெளரவ ஆலோசகர் சரவணமூர்த்தி, தங்கம் ஸ்டுடியோ சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில், புகைப்பட கலைஞர்களுக்கு என தனி நலவாரியம் அமைக்க வேண்டும். தேர்தல் நடைமுறை களை வீடியோ எடுக்கும் பணிகளின் போது உள்ளூர் புகைப்பட மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நகரச் செயலா ளர் மணிமாறன் வரவேற்றார். நகர பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

The post புகைப்பட கலைஞர்களுக்கு தனி நல வாரியம் வேண்டும் மன்னார்குடி பொதுக்குழுவில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: