திருச்சி, டிச.16: ரங்கம் ரெங்கநாதர் கோயில் வளாகத்திலுள்ள கோயில் அலுவலகம் அருகில் மின்னணு ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ரங்கம் ரெங்கநாதர் கோயில் வளாகத்திலுள்ள கோயில் அலுவலகம் அருகில் மின்னணு ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக நேற்று துவக்கி வைத்தார். இந்த மின்னணு ஆலோசனை பெட்டியில் கோயில் தூய்மை பராமரிப்பு, பிரசாதங்களில் தரம், தரிசன நடைமுறை, அர்ச்சனை பொருட்களில் தரம் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பக்தர்கள் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் செல்போன் நம்பருடன் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் கண்காணிக்கப்பட்டு பரிசீலித்து அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கோவிலுக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுக்கும் வசதியும் இதில் உள்ளது. இந்நிகழ்ச்சியில் ரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
The post ரங்கம் ரெங்கநாதர் கோயில் வளாகத்தில் மின்னணு ஆலோசனை பெட்டி appeared first on Dinakaran.