அரசு சட்டகல்லூரி வேளாண் கல்லூரிகளை அமைக்க வேண்டும்

மன்னார்குடி, டிச. 16: அரசு சட்டகல்லூரி மற்றும் வேளாண் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய மாநாடு ஒன்றிய தலை வர் பழனிவேல் தலைமையில் மன்னார்குடியில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் பாப்பையன் முன்னிலை வகித்தார். மாநாட்டு கொடியினை முன் னாள் மாவட்ட தலைவர் .நாகேஷ் ஏற்றினர், மாவட்ட தலைவர் .பால சுப்பிர மணியன் தியாகிகளின் நினைவு சின்னத்திற்கு மாலை அணிவித்தார். மாநாட்டில், சிபிஐ மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் எம்பி, முன்னாள் மாநில தலைவர் சந்திரசேகர் ஆசாத், ஒன்றிய செயலாளர் துரை அருள்ராஜன் ஆகியோர் பேசினர். மாநாட்டில் 45 பேர் கொண்ட ஒன்றியக் குழு நேர்வு செய் யப் பட்டு ஒன்றிய தலைவராக வீரசேகர், ஒன்றிய செயலாளராக பழனிவேல், ஒன்றிய பொருளாளராக காஷ்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மாநாட்டில், மாணவர்கள் வேலைக்கு சேர்ந்து அல்லது சுய தொழில் தொடங்கி வருமானம் ஈட்டத் தொடங்கும் வரை கல்விக் கடன் வசூலிப்பதைத் வங்கிகள் நிறுத்தி வைக்க வேண்டும். குடும்பத்தில் உரிய வயதுடைய ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதையும் தடை செய்திட வேண்டும்.

கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேளாண் உற்பத்தி மூலப்பொருளைக் கொண்டு மதிப்பு கூட்டும் பொருள்கள் உற்பத்தி செய்திட போதிய பயிற்சியும், கடனுதவியும் அளித்திட வேண்டும். திருவாரூர் மாவட் டத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரி, அரசு சட்டகல்லூரி மற்றும் வேளாண் கல்லூரிகளை அமைக்க வேண்டும்.இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவை தகர்க்கும் அரசுப் பணிக்கான வயது உச்சவரம்பு குறைத்ததை கைவிட்டு இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்குவதில் பழைய முறையே பின்பற்றப்பட வேண்டும்.அரசு துறைகளில் உள்ள காலிப்பணியி டங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மன்னார்குடி பெரியார் சிலையில் இருந்துநூற் றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட ஊர் வலத்தை நாகை எம்பி செல்வராஜ் துவங்கி வைத்தார்.

The post அரசு சட்டகல்லூரி வேளாண் கல்லூரிகளை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: