ஓமலூர், டிச.16: ஓமலூர் அருகே பொட்டியபுரம் கிராமம் மேல்தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் நவீன்குமார் (27). இவர் பெயிண்ட் அடிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் வேலை முடிந்து, வீட்டிற்கு சென்றபோது பொட்டியபுரம் காலனியை சேர்ந்த சேட்டு மகன் விஸ்வநாதான் (30), காமலாபுரம் கலர்காட்டை சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்வநாதன் ஆகிய இருவரும், நவீன்குமாரை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து நாங்கள் பெரிய ரவுடிகள், எங்களை மதிக்காமல் பைக்கில் செல்கிறாயா என்று கூறி, நவீன்குமாரை இரண்டு விஷ்வாக்களும் தாக்கி, கத்தியால் முதுகில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். காயமடைந்த நவீன்குமார் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பொட்டியபுரம் விஸ்வா மீது ஓமலூர், தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டு வீசியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 வழக்குகளும், காமலாபுரம் விஷ்வா மீது ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி வழக்கும் உள்ளது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post வாலிபரை கத்தியால் வெட்டிய 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.