129 பேர் குண்டாசில் கைது

சேலம், டிச.16: சேலம் மாநகர், மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 129 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள், தொடர் திருட்டு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் நடப்போர் குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுவர்கள் ஒரு ஆண்டிற்கு ஜாமீனில் வெளியே வரமுடியாது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபு, துணை கமிஷனர்கள் வேல்முருகன், பிருந்தா ஆகியோர் அதிரடியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி சேலம் மாநகரில் கடந்த 11 மாதத்தில், 113 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்ந்து குற்றசெயலில் ஈடுபட்ட ரவுடிகள், தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள்,கஞ்சா, மற்றும் குட்கா, லாட்டரி, ரேசன் அரிசி கடத்தல் என மொத்தம் 113 பேர் கைது செய்யபட்டுள்ளனர். மாவட்டத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாநகர், மாவட்டத்தில் இதுவரை 129பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post 129 பேர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Related Stories: