சிவகங்கை, டிச. 12:சிவகங்கையை அருகே தமறாக்கி ஏழைகாத்தாள் அம்மன் கோயிலில் கடந்த நவ.26ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. தினந்தோறும் அம்மன் போல் 7 சிறுமிகள் அலங்கரித்து கோயில் மண்டபத்தில் காட்சி தந்தனர். இதனைத் தொடர்ந்து டிச. 9ம் தேதி அய்யனார் கோயிலுக்கு சுமார் 30க்கும் மேற்பட்ட மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை புரவியாக எடுத்து பக்தர்கள் நேர்த்திகடவ் செலுத்தினர். நேற்று முன்தினம் ஏழைகாத்தாள் அம்மனுக்கு மது எடுத்து செல்லும் வழி நெடுக பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆட்டு கிடாய்களை வெட்டினர். இத்திருவிழாவில் ஆண்கள் தங்கள் உடம்பில் சேறு பூசிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் தமறாக்கி, குமாரபட்டி, கண்டாங்கிபட்டி, கள்ளங்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
The post சிவகங்கை அருகே அம்மன் கோயிலில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.