திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொட்டியத்தில் டூவீலர் திருடியவர் சோதனையில் கைது

 

முசிறி, டிச.12:முசிறி அடுத்த தொட்டியத்தில் டூவீலர் திருடியவர் வாகன சோதனையில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் முசிறி ரத்தினம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (55). டிரைவரான இவர் கடந்த 9ம் தேதி தனது மனைவியின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளக்க முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிகிச்சை முடிந்து வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் முசிறி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன டூவீலரை தேடி வந்தனர். இந்நிலையில் முசிறி காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் போலீசார் முசிறி பெரியார் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக டூவீலரில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்த போது, அந்த நபர் தொட்டியம்கோட்டைமேடு பகவதி அம்மன்கோவில் தெரு பகுதியை சேர்ந்த விஜய் (25) என்பதும், முசிறி அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தி இருந்த மொபெட்டை திருடியதும் தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் விஜய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

The post திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொட்டியத்தில் டூவீலர் திருடியவர் சோதனையில் கைது appeared first on Dinakaran.

Related Stories: