காட்டுநாவல் ஊராட்சியின் நவீன இயந்திரம் மூலம் புல் பூண்டு வெட்டும் பணி

 

கந்தர்வகோட்டை, டிச.12: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் காட்டு நாவல் ஊராட்சியில் தற்சமயம் பெய்த மழையில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. மழை ஈரத்தில் நிலம் உழவு செய்து வருகிறார்கள். நிலத்தின் வரப்புகளில் தேவையற்ற புல் பூண்டுகள் மழையினால் அதிக அளவில் வளர்ந்து உள்ளது. இதனை பெட்ரோல் இயந்திரம் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாய பணி நேரங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகள் நடைபெறுவதால் விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்கமால் சிரமம் அடையும் நிலை உள்ளது. ஆகையால் மழை காலங்களில் விவசாயம் பாதிக்காத வண்ணம் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டபணிக்கான அட்டவணையை மாற்றி அமைக்க விவசாய நில உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காட்டுநாவல் ஊராட்சியின் நவீன இயந்திரம் மூலம் புல் பூண்டு வெட்டும் பணி appeared first on Dinakaran.

Related Stories: