கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வெள்ளிவிழா போட்டிகளில் பங்கேற்கலாம்

 

தஞ்சாவூர், டிச. 12: திருவள்ளுவருக்கு சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் ெகாண்டாடும் வகையில், 24ம் தேதி நடக்கும் போட்டிகளில் பங்கேற்போர் 21ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர உருவச்சிலையை, முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, வெள்ளி விழா கொண்டாடும் பொருட்டு தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க திருக்குறள் தொடர்பான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி- வினா ஆகிய போட்டிகள் தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்பட உள்ளது.

24ம் தேதி காலை 10.30 மணிக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், 26ம் தேதி காலை 10.30 மணிக்கு பேச்சுப் போட்டியும், 28ம் தேதி காலை 10.30 மணிக்கு வினாடி வினா போட்டியும் தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், பேச்சுப் போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகளில் அனைத்து தரப்பு வாசகர்களும் கலந்து கொள்ளலாம்.

The post கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வெள்ளிவிழா போட்டிகளில் பங்கேற்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: