கொள்ளிடம், டிச.12: கொள்ளிடம் அருகே எருக்கூரில் புதியதாக 30 உயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கதொட்டி அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையிலும் சீரான குடிநீர் வழங்கும் வகையிலும் அப்பகுதியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையை ஏற்று வசந்தம் நகரில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நீர் தேக்க தொட்டியின் மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் போதுமான குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், மேலும் அனைவரின் தேவைக்கு அதிகமாகவும் இதன் மூலம் குடிநீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post எருக்கூரில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.