விராலிமலையில் பாரதியார் பிறந்த நாள் விழா பாரதியார் வேடமணிந்து வந்த பள்ளி குழந்தைகள்

 

விராலிமலை, டிச.12: விராலிமலை தனியார் பள்ளியில் நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவில் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக பாரதியார் வேடமணிந்து வந்து கவிதை பாடியது பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், அலுவலகங்களில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை தனியார் பள்ளியில் பாரதியார் படைத்த கவிதைகள் வாசிப்பு போட்டி மாணவர்களுக்கு நேற்று நடைபெற்றது, இதில், பாரதியார் வேடமணிந்து கலந்து கொண்ட மாணவர்கள் பாரதியார் எழுதிய கவிதைகளை பார்வையாளர்கள் முன்பு உடல்மொழி அசைவுடன் வாசித்து அசத்தினர். விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் பாரதியார் வேடணிந்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.விழாவில் விராலிமலை வட்டாட்சியர் கருப்பையா,நிர்வாக இயக்குநர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோரா்கள் பங்கேற்றனர்.

The post விராலிமலையில் பாரதியார் பிறந்த நாள் விழா பாரதியார் வேடமணிந்து வந்த பள்ளி குழந்தைகள் appeared first on Dinakaran.

Related Stories: