குன்னம், டிச.12: திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர சா.சி. சிவசங்கர் ஆணைக்கினங்க, திருமாந்துறை கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் 200 மாணவ மாணவியருக்கு நோட்டு, பேனா பென்சில் ரப்பர் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட முன்னாள் இலக்கிய அணி துணை அமைப்பாளர் கல்பனா ராஜேந்திரன் முன்னிலையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கேபி இராஜேந்திரன் மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் நோட்டு பேனா, பென்சில், ரப்பர், இனிப்பு போன்றவை வழங்கினார். நிகழ்வில், கழக முன்னோடி ஜெயப்பிரகாஷ் கிளைக்கழக அவைத்தலைவர் சுப்பிரமணியன் கிளை செயலாளர் திருலோகச்சந்தர் சரவணன் பெருமாள் சன்னாசி காசிநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
The post துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி திருமாந்துறை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கல் appeared first on Dinakaran.