கரூர், டிச. 12: உறவினர் இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(48). கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில மாதங்களாக உறவினர் ஒருவர் இறந்து துக்கம் தாளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கரூர் அமராவதி ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள மயானத்துக்கு சென்றவர், அங்கிருந்த மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post உறவினர் இறந்த துக்கம் கூலித்தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.