வேதாரண்யம், டிச.12: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மாநில அளவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று உள்ளனர்.வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கவிநேசன் ராகுல், ரூபன், ஆகியவர்கள் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றனர். இவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வாழ்த்தி சான்றிதழ் ரொக்க பரிசு வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன், முதுகலை ஆசிரியர் மதியழகன், பயிற்சி ஆசிரியர் டேவிட் ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் யோகேஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராமமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கமலா சக்திவேல், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ராஜலக்ஷ்மி ஆனந்த் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஊர் கிராமமக்கள் பாராட்டினர்.
The post வேதாரண்யத்தில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.