சிறுவளூர் அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்

 

அரியலூர், டிச 12: அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பாரதியார் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பாரதியார் படத்துக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை மலர் தூவி மரியாதை செலுத்தி, பாரதியார் முற்போக்கு சிந்தனையாளர், பல மொழிகளில் புலமை பெற்றவர். பெண் அடிமையை எதிர்த்தவர். பெண் விடுதலைக்காகவும் உணர்ச்சித் ததும்பும் தன் பாடல்கள் மூலம் இந்திய விடுதலை வேட்கையை நாட்டு மக்களிடம் தூண்டியவர்.

தமிழினம் வீரத்தோடும் தன்மானத்தோடும் வாழக்கூடிய இனம் என்று ஆங்கிலேயருக்கு உணர்த்தியவர்.மகாகவி பாரதி போன்று ஒவ்வொரு மாணவர்களும் தேசப்பற்றுடன் திகழ வேண்டும். அவரின் கவிதை வரிகளையும் பாடல்களையும் கட்டுரைகளையும் வீரம் சரிந்த அவரின் உரைகளையும் ஒவ்வொரு மாணவர்களும் கற்க வேண்டும் என்றார்.

பின்னர், அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களுக்கு பாரதியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பாரதியார் குறித்து பேசிய மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழ் ஆசிரியை அபிராமி அனைவரையும் வரவேற்றார்.முடிவில் ஆசிரியை செந்தமிழ்செல்வி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, செந்தில்குமரன், வெங்கடேசன், அந்தோணிசாமி, ஆய்வக உதவியாளர் மணிகண்டன் ,பாலமுருகன் ஆகியோர் மேற்கொண்டனர்.

The post சிறுவளூர் அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் appeared first on Dinakaran.

Related Stories: