தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரர் கோயிலில் பவித்ரோத்ஸவம் ஹோமம்

 

வலங்கைமான், டிச. 9: தெரிந்தும் தெரியாமலும் இறை வழிபாட்டில் குறைபாட்டுடன் செயல்கள் செய்ய வாய்ப்புண்டு. இதனால் இறைவனின் சாநித்யம் குறைய வாய்ப்புள்ளதால் அதை நிவர்த்தி செய்து கோயிலின் பவித்திரத்திற்காக, நடைபெறும் ஒரு உற்சவமே பவித்ரோத்சவம் எனப்படும் இந்த உற்சவம் கோயில் சுத்தி, மற்றும் புண்ய ஹவாசனம், போல் அல்ல. இது சம்ப்ரோஷணத்தை காட்டிலும் சிறந்த நிகழ்ச்சியாகும். இந்த உற்சவத்தின் பலன்கள் அபாரமாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த உற்சவம் நடத்துவதன் மூலமாக அந்தப் பகுதியில் நன்கு மழை பொழியும். வியாபார விருத்தியும் செல்வ செழிப்பும் ஏற்படும் என்பது ஐதீகமாகும்.இதையடுத்து வலங்கைமானில் ஐம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் நேற்று முன்தினம் மாலை மாலை பவித்ரோத்ஸவம் ஹோமத்துடன் ஆரம்பமானது. நேற்று யாகசாலை நிகழ்வுகள் மற்றும் உற்சவ மூர்த்திகள், சுவாமி அம்பாள் மூலவருக்கும் அபிஷேக ஆராதனைகள், பவித்ர மாலை அணிவி த்தல், மற்றும் அன்னதானம், அருட்பிரசாதம், வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

The post தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரர் கோயிலில் பவித்ரோத்ஸவம் ஹோமம் appeared first on Dinakaran.

Related Stories: