ஜெயங்கொண்டம், டிச.7: ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகள் கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. பள்ளி வாகனங்கள் பள்ளி மாணவர்களை சிறுவர்களை தங்களது வாகனங்களில் ஏற்றும்போது அவசியம் ஒரு அட்டெண்டர் (நடத்துனர்) இருக்க வேண்டும். சாலையின் இடது புறத்தில் மட்டுமே நிறுத்தி சிறுவர்கள் வலது புறத்தில் இருந்து வந்தாலும் இடது புறம் வந்து விட்டார்களா? என பார்த்து ஏற்றிய பின் புறப்பட வேண்டும். அதுபோல மாணவர்களை இறக்கி விடும்போதும் மாணவர்கள் சிறுவர்கள் மறுபுறம் செல்ல வேண்டுமானால் அவர்கள் பாதையை கடந்து சென்று விட்டார்களா என அறிந்து பின் வாகனத்தை எடுக்க வேண்டும்.
வாகனத்தை எடுக்க முற்படும்போது சீரான வேகத்தில் இயக்க வேண்டும் எடுத்தவுடன் திடீரென வேகத்தை அதிகரிக்க கூடாது மாணவர்கள் உள்ளே விழுந்து புரள நேரிடும். பள்ளி மாணவர்களை ஏற்றிய பின் ஓட்டுனர் தங்களது குழந்தைகளை ஏற்றி செல்வதாக நினைத்து வாகனத்தை இயக்க வேண்டும். வாகனத்திற்கு ஸ்பீடு கவர்னர் அமைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. சிறுவர்களை அட்டெண்டர்கள் ஏற்றவும் இறக்கி விடவும் செய்ய வேண்டும். சாலையை கடக்கும் போது சிறுவர்கள் வாகனத்தின் உள்ளே இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தில் இரண்டு புறமும் பார்த்து கடக்க வேண்டும்.
The post பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.