வெளிநாடு சென்றவரை கண்டு பிடிக்க கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம், டிச.3: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கமுதி தாலுகா பம்மனேந்தல் கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் நேற்று கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோனிடம் மனு அளித்தார். இதுகுறித்து முத்துராமலிங்கம் கூறும்போது, எனது மகன் சைவத்துரை கடந்த 2022ல் அபுதாபி நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றார். இந்நிலையில் ஓராண்டாக வீட்டிற்கு போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

இந்தநிலையில் அவருக்கு திருமணம் முடிப்பதற்காக பெண் பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் ஊர் திரும்பி வரச்சொல்வதற்காக தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் கடந்த 2024 ஜனவரி மாதம் முதல் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அங்குள்ள உறவினர்களிடம் விசாரித்தால் உரிய பதில் இல்லை. எனவே 10 மாதமாக தொடர்பில் இல்லாத எனது மகனை கண்டுபிடித்து தர கலெக்டர், மாநில,ஒன்றிய அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post வெளிநாடு சென்றவரை கண்டு பிடிக்க கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: