வாலிபர் அடித்து கொலையா?

 

புதுச்சேரி, நவ. 27: வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் காயங்களுடன் அடையாளம் தெரியாத வாலிபர் இறந்த நிலையில் மிதந்தார். வில்லியனூர் ஆரியப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் கீழே சங்கராபரணி ஆற்றில் 35 வயதுடைய அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் குப்புறப்படுத்த நிலையில் காயங்களுடன் இறந்த நிலையில் மிதந்தார். இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா, ஏஎஸ்ஐ சம்பத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார் என்பது குறித்தும், இவர் அடித்து கொலை செய்யப்பட்டு இங்கு வீசப்பட்டுள்ளாரா? அல்லது மதுகுடித்துவிட்டு ஆற்றில் விழுந்து இறந்தாரா அல்லது பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே வாலிபரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வாலிபர் அடித்து கொலையா? appeared first on Dinakaran.

Related Stories: