காரியாபட்டி பகுதியில் வெள்ளரி அறுவடை தீவிரம்

 

காரியாபட்டி: காரியாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வெள்ளரிக்காய் அறுவடை ஜரூராக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கோடை காலங்களில் வெள்ளிக்காய் சாகுபடி நடைபெறும். இந்நிலையில் இந்தாண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்பே இப்பகுதியில் வெள்ளரிக்காய் அறுவடை நடந்து வருகிறது. குறிப்பாக காரியாபட்டி அரசகுளம், ஆவியூர், குரண்டி, மீனாட்சிபுரம், முஷ்டக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பகுதிகளில் தற்போது வெள்ளரி அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.

தோட்டங்களில் விளையும் வெள்ளரிக்காய்களை தரம் வாரியாக பிரித்து, மதுரை, விருதுநகர், திருமங்கலம் ஆகிய ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெள்ளிரிக்காய் விற்பனை நன்கு உள்ளதால் அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.

Related Stories: