×

கன்னி

(6.11.2025 முதல் 12.11.2025 வரை)

சாதகங்கள்: ராசிக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கிறார். இரண்டாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறார். தன குடும்பாதிபதி ஆட்சியில் இருப்பதும் 11-ஆம் இடத்தில் குரு அதிசாரமாக இருப்பதும் சி றந்த பலன்களைத் தரும். ஆன்மிக பயணம் செய்யும் வாய்ப்பு உண்டு. சுப காரியத் தடைகள் விலகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். மனத் துணிவு அதிகரிக்கும். செய்யும் காரியங்களை முனைப்போடு செய்வீர்கள். எதிர்பாராத வரவுகளால் பொருளாதாரம் உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல் வாங்கல்களின் சிரமம் குறையும். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட எதிர்கால முயற்சிகள் வெற்றி பெறும். நீண்டநாள் பிரச்சனை ஒன்று சுமுகமாகத் தீரும்.

கவனம் தேவை: ராசிக்கு 12-ல் கேது இருப்பதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். இரண்டாம் இடத்தில் சூரியன் நீச நிலையில் இருப்பதால் தகப்பனாரோடு கருத்து வேறுபாடுகள் வரலாம். தந்தையின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம். ஆத்ம பலம் குறையலாம்.தகவல் தொடர்புகளில் கவனமும் சரியான வார்த்தையாடலும் தேவை.

சந்திராஷ்டமம்: 4.11.2025, பகல் 12.34, முதல் 6.11.2025 காலை 11.47 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று தரிசித்து வாருங்கள்.

Tags : Virgin ,
× RELATED மீனம்